Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“யோகாசன போட்டி”…. திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

திண்டுக்கல்லில் யோகாசனசங்கம் சார்பாக மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் விளையாட்டு மைதானம் அருகே உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 400க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டிகள் வயது அடிப்படையில் பல சுற்றுகளாக நடைபெற்றது. இதை மாவட்ட யோகாசன சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி போன்றோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

இவற்றில் கலந்துகொண்ட வீரர்கள் பல ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர். இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் ரமேஷ்பட்டேல் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இதனிடையில் போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட யோகாசன சங்க செயலாளர் நித்யா ராஜேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Categories

Tech |