பாகிஸ்தான் நாட்டிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அமெரிக்காவிடம் உதவி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிடம் 170 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ராணுவ ஜெனரலான காமர் ஜாவித் பாஜ்வா அமெரிக்காவின் வெளியுறவு துணை மந்திரியிடம் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் செல்வாக்கை வைத்து சர்வதேச நிதி நாணயத்தின் நிதியுதவி கிடைக்க உதவுமாறு பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.