Categories
மாநில செய்திகள்

மதுரை -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை -ராமேஸ்வரம் ரயில் சேவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06652)ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதில் மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் கால தாமதமாகவும், மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653)மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் ஒரு மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

மேலும் திருச்சி மானாமதுரை, திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் நான்கு வரை சிவகங்கை மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்ட பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடம் கால தாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |