Categories
மாநில செய்திகள்

இது ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் செயல்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள மதுரை உயர்நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அதற்கு உரிய அதிகாரிகளை நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் செயலாக அமைகின்றது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கின்றது. எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |