சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றுச்சூரியும் நாய்களை பிடிக்க கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 35க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். இது பற்றி பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பு சேர்ந்த நிர்வாகி பேசும்போது பிடிபட்ட நாய்களை மயிலாடுதுறைக்கு வேனில் கொண்டு சென்று அங்கு அனைத்து நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதன் பின் மீண்டும் சீர்காழி நகர் பகுதியில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மற்றும் ஏற்கனவே பிடித்த சாலைகளில் மீண்டும் விடப்படும் என தெரிவித்துள்ளார்.
Categories