வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பிரபல நடிகர் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிற்து.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பட டைட்டில் எப்போதும் மாஷாக இருக்கும் என்பதால் வாரிசு டைட்டில் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தையே அளித்தது. இருப்பினும் வாரிசு படம் குடும்ப கதையம்சம் கொண்ட படம் ஆக இருப்பதால் வாரிசு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் நடிகர் சரத்குமார் தற்போது வாரிசு படத்தின் லேட்டஸ்ட் தகவலை கூறியுள்ளார். அதாவது வாரிசு படம் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் படத்தில் தளபதி விஜய்யின் பொதுவான படங்களில் இருக்கும் ஆக்சன், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் உட்பட அனைத்துமே வாரிசு படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.