Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வட்டி அதிரடி உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல வங்கி…. புதிய ரேட் இதுதான்…!!!!

வீட்டுக் கடன் வழங்கும் HDFC நிதி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 0.25 சதவீதம் வீட்டுக் கடன் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி இனி வீட்டு கடன்களுக்கு 7.80% முதல் 8.30% வரை இருக்கும். கடந்த மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

தற்போது வருகின்ற ஆகஸ்ட் 3 முதல் ஐந்தாம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீண்டும் ரெப்போ வட்டி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே வரும் நாட்களில் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |