Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானம் அருகே குண்டு வெடிப்பு…. காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் காயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்  உள்ள டர்பட் ஸ்டேடியத்திற்கு வெளியே நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நகரின் விமான நிலைய சாலையில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கிடையே கால்பந்து மைதானத்தில் போட்டி நடந்து கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.  இது மைதானத்தில் பீதியை ஏற்படுத்தியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |