Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு பயிற்சி…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

விவசாயிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளின் தர பராமரிப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் சுகாதார முறைகளும், தரமானதாகவும் நுகர்வோருக்கு கிடைப்பதற்காக  அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமிற்கு வேளாண் வணிக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றுள்ளார். பிறகு உழவர் சந்தை வேளாண்மை நிர்வாக அலுவலர் இளங்கோ முன்னிலை வகித்துள்ளார்.

இதனை அடுத்து பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுப்புறத்தை பராமரித்தல், இருப்பு வைத்தல், காய்கறிகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் தரத்தை பராமரித்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியின் முறைப்படி உழவர் சந்தை விவசாயிகள் செயல்பட வேண்டும்.

இதனை அடுத்து உழவு பொருட்கள் அடங்கிய பாக்கெட்டில் இருக்கும் லேபிளில் தயாரிப்பு முகவரி, தேதி, காலாவதி தேதி மற்றும் பொருளின் பெயர் ஆகியவை இடம்பெற வேண்டும் எனவும், உணவு பொருளின் ஊட்டச்சத்து தகவல்கள், சைவ-அசைவ குறியீடு பொருளின் எடை, உணவு பாதுகாப்பு முத்திரை ஆகியவை உணவுப் பொருட்கள் அடங்கிய லேபிளில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை விவசாய விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டும் எனவும் முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் துறை அலுவலர்கள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் மஞ்சுநாத் செய்திருந்தனர்

Categories

Tech |