Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மண்ணில் இருந்து வெளிவந்த நடுகல்…. ஆய்வில் தெரிந்த உண்மை…. ஆய்வாளர் தகவல்….!!

மண்ணில் கிடைத்த நடு கல்லை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு ஆய்வு செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி சாலையோரம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடுகல் ஒன்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் அறிந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு இந்த நடுகல்லை சுத்தம் செய்து ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பான விவரங்களை முடியரசு வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த நடுக்கல் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வகையான அடுக்கு நிலை சதிக்கல் மற்றும் நடுக்கலாகும். இது முதல் நிலை போர்க்கள காட்சி அமைந்துள்ளது.

இதனை அடுத்து வீரன் வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் வைத்த நிலையில் அமைந்திருக்கிறது. இவற்றில் வீரன் எதிர்கொள்ளும் மற்றொரு வீரனை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிற்பம் சிடையூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் யாரை எதிர்கொள்கிறான் என்பது தெரியவில்லை. இந்தப் போரில் அவன் இறந்து விட்டதால் அவனது இரு மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறந்து இருக்கின்றன. பின்னர் இருவர் வலது, இடது புறங்களில் இறந்த வீரனையும் அவனது இரு மனைவியரையும் மானுலகம் அழைத்துச் செல்லுவதை குறிக்கிறது.

இதனை தொடர்ந்து தேவ கண்ணீரின் கரத்தில் சாமரம் வீசுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் மூன்றாவது நிலையில் வீரனும் இரு மனைவியரும் சிவலோக பதவி அடைவதை குறைக்கிறது. பின்னர் இறுதியாக வீரன் சிவலிங்கத்திற்கு மாலை அணிவித்து சிவப்பதம் சேர்ந்ததை குறிப்பிடுகிறது. இந்த வீரன் இப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசனாகவோ அல்லது தளபதியாகவோ இருந்திருக்கலாம். இவை வீரன் மற்றும் அவரது மனைவியரின் ஆடை அணிகலன்களை கொண்டு நோக்கும் போது இவ்வாறு கண்டறியப்படுகிறது. மேலும் இந்த கல் 6 அடி உயரமும் 4 அங்குலமும் 5 இன்ச் கனமுள்ள பலகைக்கல் ஆகும். இவ்வாறு தொழிலில் வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |