Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏராளமான பொதுமக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகள் தகவல்….!!

மருத்துவ முகாமில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பாக 18-வது வார்டு சத்துவாச்சாரி முருகன் கோவில் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சத்துவாச்சாரி நகர்ப்புற சுகாதார அலுவலக கண்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் இதயம், காது, கண், தோல் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்தம் பரிசோதனைகள் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடல் நலம் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சிலருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |