Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாளையப் போட்டியில் களமிறங்கும் சச்சின் – ரசிகர்கள் உற்சாகம்

கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீராங்கனையின் அழைப்பை ஏற்று அவரது நாளைய போட்டியில் பேட்டிங் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

உலகக் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்பட்டு வருபவர், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் புஷ் ஃபையர் போட்டியில் பங்கேற்கும் ரிக்கி பாண்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை செய்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது.

இதனை சாக்காக வைத்து ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில், நாளைய போட்டியின் போது எனது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய வேண்டுமென விரும்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனைக் கண்ட சச்சின் டெண்டுல்கரும், சற்றும் தயங்காமல் நான் பேட்டிங் செய்கிறேன் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எனது தோல்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவர்கள் கவலைப்படுவதினால், என்னால் உங்களுடைய ஓரே ஒரு ஓவரில் மட்டும் களமிறங்குகிறேன் என பெர்ரிக்கு பதிலளித்துள்ளார்.

எல்லிஸ் பெர்ரி

இதன் காரணமாக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்புகளுடன் நாளைய போட்டியை காண காத்து கொண்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு நிதி திரட்டும் முயற்சியாக புஷ் ஃபையர் என்ற பெயரில் நட்சத்திர ஜாம்பவான்கள் பங்கேற்கும் போட்டியானது நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிரிஸ்ட் தலைமையினால அணிகள் மோதவுள்ளன. தனது காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் இந்தப் போட்டியில் பங்கேற்காமல், பாண்டிங் தலைமையிலான அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்

பாண்டிங் அணி: மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லங்கர், ரிக்கி பாண்டிங்(கே), எலிஸ் விலானி, பிரையன் லாரா, பிராட் ஹைடன்,ஃபோப் லிட்ச்பீல்ட், பிரட் லீ, வாசிம் அக்ரம், டேன் கிரிஸ்டியன், லுக் ஹோட்ஜ். சச்சின் டெண்டுல்கர் (பயிற்சியாளர்)

கில்கிறிஸ்ட் அணி: ஆடம் கில்கிறிஸ்ட்(கே), ஷேன் வாட்சன், பிராட் ஹோட்ஜ், யுவ்ராஜ் சிங், அலெக்ஸ் பிலாக்வெல், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கர்ட்னி வால்ஷ், நிக் ரிவோல்ட், ஃபாவத் அஹ்மத். டிம் பெய்ன் (பயிற்சியாளர்)

Categories

Tech |