Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் 10 நாட்களாக காணாமல் போன இளம் பெண்…. கைதான ஆண்…. பின்னணி என்ன….?

பிரித்தானியாவில் 30 வயதான இளம் தாயார் 10 நாட்களாக காணாமல் போனார். இந்த நிலையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எசக்ஸை சேர்ந்த மடிசன் ரைட் (30). இளம் தாயாரான இவர் கடந்த 22 ஆம் தேதி கடைசியாக காணப்பட்ட நிலையில் அதன் பின் மாயமானார். கடந்த 26 ஆம் தேதி மடிசனின் கருப்பு நிற கார் போலீசாரால் Brackendale அவன் யூ வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மடிசன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் 36 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபர் மடிசனுக்கு நன்கு அறிமுகமானவர் என தெரிய வந்திருக்கிறது. இதற்கு இடையே மடிசன் தொடர்பில் ஏதாவது சிசிடிவி காட்சிகள் அல்லது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |