பழுதடைந்து இருக்கும் தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். அதன்பின் இவற்றிக்கு எந்த ஒரு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி பெற கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.
அதன்பின் தகுதியின் அடிப்படையில் முன்மொழிவுகள் சிறுபான்மையினர் நல இயக்கத்திற்கு பரிந்துரை செய்யப்படும். இம்மாவட்டத்தில் இருக்கும் பழுதடைந்த தேவாலயங்களுக்கு அவை இருப்பின் ஆண்டுகள் பொறுத்து நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் [email protected] என்ற இணையதளம் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்ப படிவத்துடன் பிற சேர்க்கைகளை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை அடுத்து கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட தேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து கட்டிடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும். இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள கிறிஸ்தவ தேவாலங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிதி உதவி பெற்று பயன் பெறலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.