Categories
உலக செய்திகள்

ஒரு மில்லியன் ரூபிள் வரை ஊதியம்…. தன்னார்வலர்களை திரட்டும் ரஷ்ய ராணுவம்….!!!!!!!!

உக்ரைனில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவில் இருந்து 30,000 மேற்பட்ட தன்னார்வலர்களை ரஷ்ய ராணுவம்  திரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனில் நடைபெற்று வரும் போர்தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு சாலைகளில் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் இந்த போர் தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கிவ்வை ரஷ்யப்படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து தற்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்  அதிகம் வசிக்கும் பகுதியான டான்பாஸை முற்றிலுமாக சுதந்திர பகுதியாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய இராணுவ படைகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் உக்ரைனிய படைகளின் எதிர் தாக்குதலால் டான்பாசை முழுவதுமாக கைப்பற்ற முயற்சியில் ரஷ்யப்படைகள் அங்குலம் அங்குலமாகவே முன்னேறி வருகின்றார்கள்.

மேலும் உக்ரைனிய ராணுவப்படை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இதுவரை ரஷ்யப்படைகள் சுமார் 40,000 வீரர்களை இழந்து இருப்பதாக கூறியுள்ளது. இந்த நிலையில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவின் மிகவும் ஏழ்மையான பகுதியில் இருந்து சுமார் 30,000 தன்னார்வலர்களை ரஷ்ய இராணுவம் திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இவ்வாறு போர்த் தாக்குதலில் ஈடுபட முன்வரும் தன்னார்வலர்களுக்கு ஒரு மில்லியன் ரூபிள்  ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |