Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. ஆதார் -வாக்காளர் அட்டை இணைப்பு?…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்கென குடிமக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இப்போது 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம். 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முக்கிய ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பணியானது நாளை முதல் நாடு முழுதும் தொடங்கப்படவுள்ளது. அத்துடன் அடுத்த வருடம்  2023-க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆதார் வாக்காளர் அடையாள எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டமானது தலைமை செயலகத்தில் நடந்தது. இவற்றில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய 9 கட்சிகள் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரி சார்பாக  அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இப்போது இரட்டை பெயர் பதிவு, ஒரே வாக்காளர் பெயர் பல்வேறு இடங்களில் பதிவாகி இருக்கும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை ஆகஸ்ட்-1 முதல் துவங்கப்படும் ஆதார்எண் இணைப்பு பணிகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையமானது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பின் வரும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயர்களை புதியதாக சேர்க்கும் பணிகள் வழக்கம்போல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |