Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்பு : கேரளா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் குரங்கு அம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். கோவை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குரங்கு அம்மை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் நம்மிடம் உள்ளது. இதுவரை குரங்கமை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது சென்னையிலேயே ஆய்வகம் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |