Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சா”…. கடலோர போலீசார் தீவிர விசாரணை….!!!!!

தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சாவை கடலோர போலீஸ்சார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர போலீசார் அங்கு சென்று பார்த்தார்கள்.

அதில் இரண்டு கிலோ பார்சல் என சுமார் 30 பார்சலுக்கு மேலாக மொத்தம் 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |