Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே….! இன்று (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு….. தரிசன டிக்கெட்….. ரெடியா இருங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தரிசனம் செய்ய திருமலை தேவஸ்தானம் ஆன்லைனில்  ஆகஸ்டு 1ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.  600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பவித்ரோச்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்யலாம்.

இந்த பவித்ரோசகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் காலை 7 மணி அளவில் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் ஒன்றுக்கு வரவேண்டும். தரிசன டோக்கனுக்கு அசல் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு தேவஸ்தான அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |