தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோகுல் தனது நண்பர்களான கார்த்திக், பொன்ராசு, சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகியோருடன் சேர்ந்து சொக்கநாதன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது கோகுல் திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கோகுலை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றிற்குள் குதித்து சுமார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கோகுலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.