Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: தோல்வியடைந்த காவல்துறை…. காங்கிரஸ் தலைவர் ஓபன் டாக்….!!!!

கள்ளக்குறிச்சி பகுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு வருகைதந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். தமிழக காவல்துறை புகழ்பெற்றது ஆகும். ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. இதனை கண்டறிய முடியாமல் போனது, சமூகவலைதளங்களில் இச்சம்பவம் காட்டுத் தீயாக பரவியபோது இதன் பின்னணியில் இருப்பது யார்..? எதற்காக இந்த செய்திகளை வதந்தியாக பரப்பிருக்கிறார்கள் என காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்க வேண்டும்.

வன்முறையாளர்கள் பள்ளிக்குள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகின்றபோது காவல்துறை பயந்து ஓடுகிறது. அந்த நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கிறபோது இதுபோன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. ஒரு மாணவி இறந்திருக்கிறாள். இதற்காக நாம் வருத்தப்படுகிறோம். இதன் உண்மைத் தன்மை என்னவென்று அரசும், காவல்துறையும் தான் கூற வேண்டும். இவ்விஷயத்தில் அரசை பொறுத்தவரையில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.

ஆகவே அரசினுடைய நோக்கம் உண்மையை கண்டறிவதில் உறுதியாக இருக்கிறார்கள். முதலமைச்சருக்கு 2 கடமைகள் இருக்கிறது. இதில் ஒன்று மாணவி மரணத்தை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2வது வன்முறையாளர்கள் கொள்ளையர்களை கண்டுபிடித்து வாழ்க்கையில் இனி அவர்கள் இது போன்று தவறுகள் செய்யாதவாறு அவர்களை தண்டிக்க வேண்டும். இந்த இரண்டையும் சமூகத்தினுடைய மேம்பாட்டுக்காக முதலமைச்சர் செய்ய வேண்டும். இதற்கிடையில் தமிழகத்தில் புது கல்விக்கொள்கை தொடர்பாக பிரதமர்மோடி பேசுவது தவறு. காரணம் தமிழக முதலமைச்சர், தமிழக மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் கூறினார்.

Categories

Tech |