பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் வியாபாரம், தொழில், மத்திய அரசு பணி, பொறியியல், அறிவியல், சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், கல்வி மற்றும் கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விருது ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. எனவே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விருது பெற தகுதியானவர்கள் www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15-ம் தேதி ஆகும்.