தனுசு ராசி அன்பர்களே..!
இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
நண்பர்களிடம் தொழில் சம்பந்தமாக எந்த விஷயத்தையும் பேச வேண்டாம். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். கடன் வாங்கக் கூடிய சூழல் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்பட வேண்டும். வெளிவட்டாரத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். வெளி நபர்களிடம் பேசும்பொழுது கவனமாக பேசவேண்டும். குடும்பத்தவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அவசரப்படாமல் தெளிவாக ஆராய்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவிக்கிடையே சண்டை உண்டாகும். தேவையில்லாத விஷயங்களைப் பேசி பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். காதலில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். கவலை இருந்துக்கொண்டே இருக்கும். மாணவர்கள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்ளுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.