மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில்தான் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கிறது என அதிமுக எம்.பி கூறியுள்ளார்.
அதிமுக எம்.பி கே.சி. பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமையானது தொண்டர்களால் வரவேற்கப்படுகிறது என்றார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் தொண்டர்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏதுமில்லை. ஏனெனில் மத்தியிலாலும் பாஜக அரசின் விருப்பத்தின் பேரில்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இதனையடுத்து அதிமுக கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் பொதுவான உறுப்பினர் அட்டையை கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து அதிமுகவில் முறையாக பொதுச் செயலாளர் வாக்கெடுப்பை நடத்தி தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.