குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதனை அடுத்து கரடி சிறிது தூரம் நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது. அந்த கரடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.