கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் ஒரு இறைச்சி கடை அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ ஆட்டு இறைச்சி மற்றும் 15 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.
இதனை தொடர்ந்து மளிகை கடையில் தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோ இருந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அதிகாரிகள் கடையில் இருந்த 3 கிலோ அஜினோமோட்டோவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.