வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு விஜய் புறப்பட்டுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்பானது சென்னையில் நடந்து வருகின்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. ஆனால் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் சில பிரச்சனை காரணமாக பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப்படும் வரையில் அங்கு படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இதனால் வாரிசு திரைப்படத்தின் படபிடிப்பு தடை படுமோ என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த எந்த பிரச்சனை இல்லை என்றும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் விஜய் விசாகபட்டினத்திற்கு படபிடிப்பிற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார். இத்திரைப்படமானது ஆந்திராவில் படமாக்கப்பட்டாலும் அது நேரடி தமிழ் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த எந்த தடையும் இல்லையாம் குறிப்பிடத்தக்கது.
Recent Click of Thalapathy ❤️🔥#Varisu #ThalapathyVijaypic.twitter.com/OcwahMYdkD
— Actor Vijay Fans (@ActorvijayHCF) July 31, 2022