அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக ரோஜா இருக்கிறார். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டார். அதன்படி விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் 3000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் வரவழைக்கப்பட்டனர்.
இவர்கள் ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அடிப்படையில் ஒரே நேரத்தில் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர். இதன் காரணமாக ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரோஜா இடம் பெற்றுள்ளார். மேலும் ஒரு பெண் அமைச்சரை இதுவரை 3000 போட்டோகிராபர்கள் ஒரே நேரத்தில் போட்டோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.