Categories
மாநில செய்திகள்

இன்று(ஆகஸ்ட் 1) சான்றிதழ் சரிபார்ப்பு….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி சார்பாக  ஜூலை 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு இன்று   ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஜூலை 28ஆம் தேதி நடக்கும் என்று டி என் பி எஸ் சி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 28ஆம் தேதி 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதனால் 28ஆம் தேதி அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்தது.எனவே அன்றைய நாளில் திட்டமிட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று  காலை 10 மணிக்கு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |