Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு 4ஜி சேவை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம் சார்பாக தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு விரைவில் 4 ஜி அலைவரிசை சேவை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள தகவல் இணைப்பு பெறாத கிராமங்களை உள்ளடக்கி 4ஜி மொபைல் போன் சேவையை நிறைவு செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.அந்தத் திட்டத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு விரைவில் 4ஜி சேவை கிடைக்க உள்ளது. அதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு மின் ஆளுமை சேவைகள், வங்கி சேவை, தொலை மருத்துவம், தொலைநிலை கல்வி போன்றவற்றை மொபைல் பிராட்பேண்ட் வழியாக வழங்க ஊக்குவிக்கப்படும்.இதன் மூலமாக கிராமங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |