2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு (ஜூலை 31) முடிந்தது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது .
இனி தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இன்று முதல் ரூ.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு வருமானம் உடையவர்கள் ரூ.1,000 அபராதமும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்கள் ரூ.5,000 அபராதமும் கட்ட வேண்டும். இந்த அவகாசத்தை கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்து வந்த நிலையில் இந்த முறை அது நீட்டிக்கப்படவில்லை.