Categories
பல்சுவை மாநில செய்திகள்

விலை RS36.50 குறைப்பு … சிலிண்டர் விலை அறிவிப்பு… வேண்டுகோள் வைக்கும் பொதுமக்கள்…!!!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 36 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையினை மாதாமாதம் ஒன்றாம் தேதி அன்று நிர்ணயித்து வருகிறது. அதன்படி பார்த்தோம் என்றால் கடந்த மாதத்திலிருந்து 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை எண்ணெய் நிறுவனங்களில் சார்பில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது மாதமாக தற்போதும் அந்த 19  கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையானது தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ஆனது ரூபாய்  36 ரூபாய் 50 பைசா தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் அதன் விலையானது 2,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 187 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் 2186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது மேலும் குறைக்கப்பட்டு 2042186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இது தற்போது மேலும் குறைக்கப்பட்டு 2041 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனையாக இருக்கிறது.

அதேபோல் வீட்டு உபயோகத்திற்கான மானிய சிலிண்டரின் விலை என்பது எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து 1068 ரூபாய் 50 பைசாவாக தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை. தொடர்ந்து வீட்டு உபயோகித்துக்கான சிலிண்டர் விலையும் குறைக்க வேண்டும் என்பது பொதுமக்களுடைய வேண்டுகோளாக தொடர்ந்து இருந்து வருகிறது.

Categories

Tech |