பொறியியல் படிப்புகளில் விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. விளையாட்டுப் பிரிவில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கு 2,442 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களை நேரில் வந்து சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
Categories