Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. 124 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் கனமழையால் 7 அணைகள் உடைந்ததில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில்  பலூசிஸ்தான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடர்ந்து பெய்து  வரும்  கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாகாண பேரிடர் மேலாண் கழகம் கூறியதாவது, “பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து  வரும்  கனமழையால் பல அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் கனமழையால் 7 அணைகள் உடைந்து விட்டன. கச்சோ நகரில் 30 கிராமங்கள் மற்றும் இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. மலை பகுதியில் 50 கிராமங்கள் வரை நீரில் மூழ்கியுள்ளன. கடந்த ஜூன் மாதம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாகாணத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி கூறியுள்ளார்.

Categories

Tech |