கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை இருக்கிறது. அதனருகில் ஆழியாறு தடுப்பணை உள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் நலன்கருதி ஆழியாறு தடுப்பணையில் குளிக்க பொதுப்பணித் துறை மற்றும் ஆழியார் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். ஏனெனில் தடுப்பணையில் புதை மணல் மற்றும் ஆழமான சுழல் நிறைந்த பகுதி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையையும் மீறி பலர் அணையில் குளித்து மகிழ்வர். இதனால் ஒருசில நேரங்களில் இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தென் மேற்கு பருவமழை எதிரொலியாக தடுப்பணையில் இப்போது அதிகம் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இவற்றில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கும்போது ஆபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நடந்து விடக்கூடாது எனும் நோக்கில் நேற்று காவல்துறையினர் தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுப்பு அமைத்து (பேரிகார்டு,) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியிருப்பதாவது “ஆழியாறு தடுப்பணையில் உயிரிழப்பை தடுப்பதற்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினரை பாராட்டுகிறோம். இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு என்பது அணை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த முடியும். இதற்கென கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை வாயிலாக விரைவில் தடுப்புவேலி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர்.