தமிழ்நாடு அரசில் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் பதவிகளில் காலியாக உள்ள 1,089 இடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் மாதம்1- 3ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் எனவும், இதில் முதல் தாள் தேர்வு ஐ.டி.ஐ. தரத்திலும், 2-ம் தாள் தேர்வில் தமிழ் தகுதித்தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. தரத்திலும், பொதுப்பாடம் ஐ.டி.ஐ. தரத்திலும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் கிடைக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மொத்தம் ஆயிரத்து 89 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும்.