கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது கருத்தரங்கில் அவர் பேசியதாவது “துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி வாயிலாகவே பதில்கொடுக்க வேண்டும். இதையடுத்து நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஆயுதக்குழுக்களுடன் சென்ற 8 வருடங்களாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. எனினும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசானது பேச்சுவார்த்தை நடத்தும். மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்போது, நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்தது. ஒருசில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது.
தாக்குதல் நடைபெற்ற 9 மாதங்களுக்குள் அப்போதைய இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இருநாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறிகூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தான் நட்பு நாடா..? (அல்லது) எதிரி நாடா..? என்பதில் தெளிவே இல்லாமல், ஒரு ஒப்பந்தமாக..? புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாலகோட் வான்வழியில் நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம். இதற்கிடையில் பயங்கரவாதச் செயலை செய்தால் அதற்குரி விலையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த செய்தி” என்று அவர் பேசினார்.