சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம், ஸ்ரீ வள்ளிவிலாஸ் பொன்னகைக்கூடம் சீனிவாசன் மற்றும் ரமேஷ், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கேசினோ சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் பலர் கலந்து கொண்டு மல்யுத்த பானியிலேயே யானை, மந்திரி, குதிரை, சிப்பாய் போன்று நடித்து செஸ் விளையாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் முதல் முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற போட்டியை போன்று செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடி காண்பித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, நகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சுபாஷினி ராஜா, வக்கீல் அணி கார்த்திக், மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் பாண்டியன், துணைத் தலைவர் கலைச்செல்வன், துணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் தேசிய நடுவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.