Categories
சினிமா தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி…. புகை பிடிக்கும் காட்சி…. நீதிமன்றத்தில் ஆஜுதாவதிலிருந்து தனுசுக்கு விலக்கு….!!!!!!!!!

நடிகர் தனுஷ் நடிகை அமலாபால் போன்றோர்  நடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி இந்த படத்தை ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குனராக நடிகர் தனுஷ் அவரது மனைவியான  ஐஸ்வர்யாவும் இருக்கின்றனர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி  இடம் பெற்றுள்ளது. அப்போது புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்னும் அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதனை அடுத்து நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா போன்றவருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் வி கே பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் தனுசுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கு தொடர்ந்து உள்ளார் அதில் தனக்கு அனுப்பிய சம்மன்  ரத்து செய்ய வேண்டும் எனவும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விளக்கு அழிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விளக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதை கோரிக்கையுடன் நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதி என் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரின் வழக்கையும்  ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |