ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பரவலாக மழை பெய்யும். இதனால் நாட்டிற்கு அதிகமான மழைப் பொழிவை கொடுக்கும் வழியாக இந்த பருவ மழை கருதப்படுகின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை வாயிலாக தான் நாட்டிற்கு தேவைப்படும் 75% வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. இந்த வகையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருடம் தோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
முதல் இரண்டு வாரங்களுக்கு சாதாரணமாக மழை பெய்த மழை அதன் பின் தீவிரமடைந்திருக்கின்றது. பின்னர் மீண்டும் லேசாக பெய்து வந்த மழை தற்போது மீண்டும் தீவிரமடைந்திருக்கின்றது. கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததன் பெயரில் மாநிலத்தின் காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இடையிடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை குஜராத் வரையிலான பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. அத்துடன் கர்நாடகாவிலும் மழை தீவிரமடைந்து இருக்கின்றது. இந்த சூழலில் கேரளாவில் இன்று முதல் வியாழன் வரை நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய தொடர்ச்சியான காலங்களை எதிர்பார்க்கப்படுவதனால் சில பகுதிகளில் குறைந்த தீவிரம் கொண்ட திடீர் வெள்ளம் ஏற்படலாம் என ஐ எம் டி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றது.