Categories
மாநில செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆற்று நீர் திறப்பு…. சலவை தொழிலாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முன்அறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் ஆத்துகுள் காயவைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முன் கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து நூற்றுக்கணக்கான சலவைத் தொழிலாளர்கள் இன்று செக்போஸ்ட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து சலவை தொழிலை மட்டும் வாழ்வாதமாகக் கொண்டிருக்கும் தங்களுக்கு இது போன்ற முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட்டால் தொழில் அடியோடு பாதிக்கப்படும். எனவே உடனடியாக முன்னறிவிப்பு இன்றி தண்ணீரை திறந்து விட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமான டோல்கேட் திருவானைக்காவல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |