Categories
தேசிய செய்திகள்

கட்சி நன்கொடை…. முதலிடத்தில் திமுக…. ADR வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ, தேர்தலின்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறது. அதனைப் போல தேசிய மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள், தேர்தல் நிதி உள்ளிட்ட விவரங்களை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுதும் உள்ள 27 மாநில கட்சிகளுக்கு 2020-21 நிதியாண்டில் எவ்வளவு கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, 27 மாநில கட்சிகளுக்கும் சேர்ந்து மொத்தம் ரூ.124.53 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

இதில் 5 கட்சிகளுக்கு மட்டுமே ரூ.113.79 கோடி கிடைத்துள்ளது. இவற்றில் ரூ.61 கோடி நன்கொடையுடன் ஐக்கிய ஜனதா தளம் முதல் இடத்திலும், ரூ.34 கோடியுடன் திமுக 2 வது இடத்திலும் உள்ளது. ஆம் ஆத்மி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக நன்கொடை கிடைத்துள்ள கட்சிகளின் திமுக முதல் இடத்திலும், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமாதி ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கான நன்கொடை குறைந்து உள்ளது. இதனையடுத்து மதிமுக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் தந்திரிக உள்ளிட்ட கட்சிகளுக்கு குறிப்பிட்ட நிதியாண்டில் நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை என்று ADR தெரிவித்துள்ளது. மேலும் நன்கொடை குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்று ADR தெரிவித்துள்ளது.

Categories

Tech |