தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்த வருடம் முதல் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் மாணவிகள் சேர்ந்துள்ளனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு அடுத்த மாதம் முதல் இந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதவித்தொகைக்கு மாணவிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கி கணக்கு விவரங்களின் திருத்தம் இருப்பின் அதனை மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக அவகாசம் கொடுத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.