கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை பாஸ்கரின் கார் முந்தி இருக்கின்றது.
அப்போது பின்னால் வந்த ஜெயச்சந்திரனின் காரும் பாஸ்கரன் காரை முந்த முயற்சி செய்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக ஜெயச்சந்திரனின் கார் பாஸ்கரின் காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் அருகில் இருந்து விவசாய நிலத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் பாஸ்கர் காரில் வந்த ஐந்து பேர், ஜெயச்சந்திரன் காரில் வந்த இரண்டு பேர் என மொத்தம் ஏழு பேர் காயமின்றி உயிர் தப்பித்துள்ளனர். இந்த விபத்து காட்சி அந்த பகுதியில் உள்ள எடை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.