Categories
மாநில செய்திகள்

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு….. இது கட்டாயம்….. மாநில மகளிர் ஆணையம் அதிரடி….!!!!

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் தமிழ்நாடு இணைப்புக் குழுவின் 27 ஆவது மாநில மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் ஆணையர் குமரி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் ஆணையர் குமரி தெரிவித்ததாவது: “பெண்களுக்கான நிதிநிலை அறிக்கையில் 30% ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். மகளிர் விடுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு கட்டாயம் மனநல ஆலோசனை மாதம்தோறும் வழங்க வேண்டும். தாலிக்கு தங்க திட்டத்திற்கு மாறாக ஆறாம் வகுப்பு முதல் முதுகலை கல்லூரி படிப்பு வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மாணவிகளுக்கும் பணம் வழங்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பெண்களுக்கான நிதிநிலை அறிக்கையில் மூன்று வகையாக பிரித்து திட்டங்கள் வகுக்கப்படும். மூன்று வகைகளில் அனைத்து தரப்பு பெண்களும் பலன் அனுபவிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் காவலன் செயலி பெண்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது. பெண்கள் தங்களது கல்லூரிகளில் அல்லது பள்ளிகளில் நடக்கும் குற்றங்களை தைரியமாக சொல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |