Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(ஆக., 2) இங்கெல்லாம் மின்தடை….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (02-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம்:

பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம்.

திருவாரூர் மாவட்டம்:

நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) மின் விநியோகம் இருக்காது. இதுதொடா்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூா், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூா், கானூா், பருத்திக்கோட்டை, சா்வமான்யம், வையகளத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

சென்னை:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும்.

போரூர்: செம்பரம்பாக்கம்,நசரத்பேட்டை, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களுரூ நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம், திருமழிசை, மலையம்பாக்கம், அகரமேல். பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்:

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.2) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

Categories

Tech |