ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார் விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சிவகுமார் தனது மனைவி பிரியாவுடன் ஈரோட்டிற்கு வந்துள்ளார். மணிகண்டன் கடைக்கு சென்ற அவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் கடையின் முன்பே மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வீரப்பன்சத்திரம் போலீஸ்சாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது சிவகுமார் பேசும்போது, கடந்த வருடம் மணிகண்டன் வெங்காயம் மொத்தமாக வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை அனுப்பி வைத்தேன். அதற்கு 17 ஆயிரத்து மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள 90 ஆயிரத்தை கடந்த ஒரு ஆண்டாக கேட்டு வருகின்றேன் ஆனால் தர மறுக்கின்றார். அதனால் என்னிடம் மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம் இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தீக்குளிக்க முடிவு செய்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.