இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் பொருளாதார பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் நிலைமை சரியான பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் மூன்று மாதம் நிறுத்தப்பட்ட நிலவே தொகை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு மற்றும் 18 மாத அரியர் பே தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் DA உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் AICP index குறைந்தபட்சம் 4% அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி அகவிலைப்படி 38% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலும், 2 வது ஜூலை முதல் டிசம்பர் வரை காலகட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜெனரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதம் காலமாக நிலுவையில் உள்ள DA அரியர் தொகை மத்திய அரசு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை வழங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.