Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த இலங்கை மக்கள்…. நாடு கடத்தும் சுவிட்சர்லாந்து…. OMCT கடும் கண்டனம்…!!!

இலங்கை அகதிகளை நாடு கடத்தக்கூடாது என OMCT அமைப்பு கூறியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை அகதிகளை சுவிட்சர்லாந்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதாக சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக OMCT சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் கவுன்சிலரான கரீம் கெல்லர் பட்டனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது.

அதில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோரை நாடு கடத்தும் நடவடிக்கையை உடனடியாக சுவிட்சர்லாந்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. அதன் பிறகு இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மருத்துவ உதவி கூட பெற முடியாமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் இலங்கை மக்களை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதை மீறி நாடு கடத்த வேண்டும் என்று நினைப்பது சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புகளை மீறவைப்பது போன்றதாகும். மேலும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளான இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவி என்பது மிகவும் அவசியமாகும். இதில் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளான இலங்கை தமிழர்களும் அடங்குவர். இவர்களுக்கு தற்போது வேண்டிய மருத்துவ உதவி சுவிட்சர்லாந்தில் கிடைக்கிறது. இந்த சூழலில் இலங்கை மக்கள் நாடு கடத்தப்பட்டால் அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி கிடைக்காமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள் என்று கூறியுள்ளது.

Categories

Tech |