அம்பத்தோட்ட துறைமுகத்தில் சீனாவில் உளவு கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கருமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து கோத்தபய ராஜபக்சே, மகேந்திர ராஜபக்சே அதிபர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கோத்தபய நாட்டை விட்டே ஓடிவிட்டார். இந்த நிலையில் இலங்கைக்கு ஏற்கனவே கடன் மேல் கடன் கொடுத்து இங்குள்ள அம்ப தோட்டத்து துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்திருக்கின்ற சீனா இங்கிருந்து இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில் சீன ராணுவத்தில் யுவான் வாங்க்-5 என்ற உளவு கப்பல் அம்பந்தோட்டாவிற்கு வரும் 11ஆம் தேதி செல்வதாகவும் 17ஆம் தேதி வரை அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழக ஆந்திரா, கேரள மாநிலங்களை உஷார் நிலையில் இருக்கும்படி ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆய்வு மையங்களை இந்த கப்பல் உளவு பார்ப்பதற்கான அபாயம் இருக்கிறது.
இது பற்றி இலங்கை ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில் மற்ற நாடுகளின் வர்த்தகராணுவ கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது போலவே சீன கப்பலுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. இந்தியா கண்காணிப்பு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று பேசும்போது, இந்தியா தனது பாதுகாப்பிற்கும் பொருளாதார நலனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த சம்பவத்தையும் கவனமாக கண்காணித்து தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார்.